அரகண்டநல்லூர் அருகே 300 ஆண்டுகளாக நடைபெறும் தேர் தூக்கும் திருவிழா

அரகண்டநல்லூர் அருகே 300 ஆண்டுகளாக நடைபெறும் தேர் தூக்கும் திருவிழா

அரகண்டநல்லூர் அருகே 300 ஆண்டுகளாக நடைபெறும் தேர் தூக்கும் திருவிழா


அரகண்டநல்லூர் அரகண்டநல்லூர் அருகே உள்ளது வீரப்பாண்டி கிராமத்தில் தேர் தூக்கும் திருவிழா நேற்று இரவு நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே உள்ளது வீரப்பாண்டி கிராமம். இந்த கிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சித்திரை மாதம் நடைப்பெறும் சித்திரை திருவிழாவானது இந்த ஆண்டு கடந்த 14ம் தேதி மாலை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து 14 நாட்களாக அருள் மிகு ஸ்ரீ ஸ்ரீ தர்மராஜா திரெளபதி அம்மன் இரவு வெவ்வேறு வேடங்களில் வீதி உலா நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் தூக்கும் திருவிழா இன்று இரவு நடைபெற்றது. சரியாக 9.30 மணிக்கு 10 டன் எடைக் கொண்ட 31 அடி தேரினை 400 நபர்கள் தங்களின் தோலில் சுமந்து தேர் தூக்கும் திருவிழாவானது தொடங்கியது. இரவில் இருந்து நாலை மாலை 6 மணிவரை 5 கிமி கொண்ட வீரப்பாண்டி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக மூன்று முறை சுற்றி வந்து மீண்டு ஆலயத்தின் முன் தேர் நிறுத்தப்படும்.

தேர் முதல் முறை வலம் வரும் போது அதில் அர்ஜூனன், திரௌபதி, மகாவிஷ்ணு ஆகியோரும்; இரண்டாம் முறை கிருஷ்ணன், அர்ஜுனனும்; மூன்றாம் முறை கிருஷ்ணனும் அலங்கரிக்கப்பட்டு மக்களுக்கு காட்சி அளிப்பர். இந்த தேர் தூக்கும் விழாவில் வீரபாண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள புலிக்கல், ஒட்டம்பட்டு, அருணாபுரம், தேவனூர், நாயனூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திரெளபதி அம்மனை வழிபட்டனர்.

Tags

Next Story