"3,000 மதுபாட்டில்கள் குருவிமலையில் அழிப்பு"

X
காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார், பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி, எரிசாராயம் மற்றும் போலி மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார், பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி, எரிசாராயம் மற்றும் போலி மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார், பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி, எரிசாராயம் மற்றும் போலி மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில், 2022, 2023ம் ஆண்டுகளில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சோதனையிட்டு ஏராளமான சட்ட விரோத மதுபானங்களை பறிமுதல் செய்து உள்ளனர். அவ்வாறு பறிமுதல் செய்த மதுபானங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, 315 லிட்டர் எரிசாராயம், 3,000 போலி பிராந்தி பாட்டில்களை, காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை கிராமத்தில், மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் முன்னிலையில், ஜேசிபி இயந்திரம் வாயிலாக குழி தோண்டி கொட்டி அழிக்கப்பட்டது."
Next Story