3000 பனியன்கள் பறக்கும் படையினரால் பறிமுதல் !

3000 பனியன்கள் பறக்கும் படையினரால் பறிமுதல் !

பறக்கும் படை

இராசிபுரம் அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜய் பாஸ்கர் படம் அச்சிடப்பட்ட 3000 பனியன்கள் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

நாமக்கல் :ராசிபுரம் அருகே கர்நாடக பதிவின் கொண்ட வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் விஜய் பாஸ்கர் படம் அச்சிடப்பட்ட 3000 டி ஷர்ட்டுகள் பறக்கும் படையினரால் பறிமுதல்.ராசிபுரம் அருகே வெற்றி விகாஸ் செக்போஸ்ட் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி செங்குட்டுவேல் தலைமையில் வாகன சோதனையில் அமுதா மற்றும் சதீஷ் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கர்நாடக பதிவெண் கொண்ட ஈச்சர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது அதிமுக சின்னம் அச்சிடப்பட்ட பனியன்கள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்டதை அறிந்து உடனடியாக பனியன்களை பறிமுதல் செய்தார். இதன் மதிப்பு சுமார் 25 லட்ச ரூபாய் இருக்கும் எனவும் கொரியர் வாகனங்களில் இது போல் பனியன்கள் சென்றுள்ளதாக தெரிய வருகின்ற நிலையில் அனைத்து கொரியர் வாகனங்களையும் கண்காணிக்க அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story