300வது வாரமாக மரக்கன்றுகள் நடும் பணி - மேயர் ஜெகன் பங்கேற்பு

300வது வாரமாக மரக்கன்றுகள் நடும் பணி - மேயர் ஜெகன் பங்கேற்பு

மரக்கன்று நடும் குழுவினர் 

தூத்துக்குடியில் ஆல்கேன் டிரஸ்ட் சார்பில் 300வது வாரமாக நடந்த மரக்கன்றுகள் நடும் விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டார்.
தூத்துக்குடியில் ஆல்கேன் டிரஸ்ட் சார்பில் நகரை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் வாரம் தோறும் 20 மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சமுதாயப் பணி இன்று 300 வது வாரமாக வெகு விமர்சியாக பிரைன்யன்ட் நகர் 2வது தெருவில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு டிரஸ்ட் நிறுவனர் வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல் தலைமை வகித்தார். இதில் மேயர் ஜெகன் பெரியசாமி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்து, உறுப்பினர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் டிரஸ்ட் உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story