31 விநாயகர் சிலைகளுக்கு மட்டும் அனுமதி இன்ஸ்பெக்டர் தகவல், டி.எஸ்.பி. நேரில் ஆய்வு
Komarapalayam King 24x7 |6 Sep 2024 11:36 AM GMT
குமாரபாளையத்தில் 31 விநாயகர் சிலைகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில் டி.எஸ்.பி. நேரில் ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 31 விநாயகர் சிலைகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில் டி.எஸ்.பி. நேரில் ஆய்வு செய்தார். நாளைமறுதினம் விநாயகர் சதுர்த்தி நாளையொட்டி விநாயகர் சிலைகள் கொலு வைத்து வழிபட போலீஸ் ஸ்டேஷன் அனுமதி கடிதம், தீயணைப்பு துறை அனுமதி கடிதம், உள்ளிட்டவைகளை ஏற்பாடு செய்வதுடன் அந்தந்த பகுதி பொதுமக்கள், இளைஞர்கள், பந்தல், மேடை, மின் விளக்கு அலங்காரம் உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இது குறித்து இன்ஸ்பெக்டர் தவமணி கூறியதாவது: குமாரபாளையம் பகுதியில் கடந்த ஆண்டு கொடுக்கப்பட்ட 31 விநாயகர் சிலைகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டது. புதிய சிலைகளுக்கு அனுமதி இல்லை. அந்தந்த பகுதி விநாயகர் சிலை வைக்கும் குழுவினருடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, 6 பேர் கொண்ட குழுவினர், இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். விநாயகர் சிலைகள் அமைப்பது குறித்து டி.எஸ்.பி. இமயவரம்பன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
Next Story