31 கி.மீ நீளத்திற்கு சாலை அமைக்கும் பணி, மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு.
Namakkal (Off) King 24x7 |18 Jan 2025 8:46 AM GMT
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, கீழூர், மேலூர், கெடமலையை இணைக்கும் வகையில், ரூ.139.65 கோடி மதிப்பீட்டில், 31 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழூர் ஊராட்சி, கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான போதமலையில் கீழூர், மேலூர் மற்றும் கெடமலை ஆகிய மூன்று குக்கிராமங்களை உள்ளடக்கியது. இவ்வூராட்சியில் 1,727 குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின மக்கள் (Particularly Vulnerable Tribal Groups) வாழ்ந்து வருகின்றனர். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் இவ்வூராட்சிக்கு சரியான சாலை வசதி இல்லாமல் இருக்கிறது. இங்கு வாழும் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கரடு முரடான பாறைகளுடன் கூடிய, ஆபத்தான மலைப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இம்மக்களின் துயர்துடைக்க, தமிழ்நாடு முதலமைச்சர் 18.02.2024 அன்று நபார்டு திட்டத்தின் கீழ் கீழூர், மேலூர், கெடமலையை இணைக்கும் வகையில், ரூ.139.65 கோடி மதிப்பீட்டில், 31 கிலோ மீட்டர் நீளத்திற்கு போதமலையில் சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இச்சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். அதனைத்தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், போதமலை கீழுர்-மேலூர் மற்றும் கெடமலையில் கீழூர், மேலூர், கெடமலையை இணைக்கும் வகையில், ரூ.139.65 கோடி மதிப்பீட்டில், 31 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், அப்பகுதியில் உள்ள மொத்த குடியிருப்புகளின் எண்ணிக்கை, வசிக்கும் பொதுமக்கள் விபரம், சாலை பணிகள் விபரம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து, குறிப்பிட்ட ஒப்பந்த காலத்திற்குள் சாலையை தரமானதாக அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்குமாறு ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் வனிதா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story