மே.31ல் வைகாசி திருவிழா தொடக்கம்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மாணிக்கவாசகர் பிறந்த ஊரான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயில் உள்ளது இக்கோவிலில் வைகாசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் வரும் மே 31-ஆம் தேதி காலை 10:30 மணிமுதல் 11:30 மணிக்குள் கடக லக்னத்தில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது இத்திருவிழாவில் முக்கிய நிகழ்வான மாங்கொட்டை திருவிழா ஜூன் 4-ஆம் தேதி நடைபெறுகிறது. மேலும் ஜூன் 7-ஆம் தேதி காலை 10:35 மணிக்கு மேல் 11:05-க்குள் சிம்ம லக்னத்தில் திருமறைநாதர் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. ஜுன் 8-ஆம் தேதி காலை 9:30 முதல் 10:30 மணிக்குள் தேரோட்டம் நடைபெறுகிறது. இத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
Next Story



