கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.31.30 லட்சத்திற்கு வர்த்தகம்

கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.31.30 லட்சத்திற்கு வர்த்தகம்

ஏலத்திற்கு கொண்டு வரப்பட்ட விவசாய விளைபொருட்கள்

கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் ரூ. 31.30 லட்சத்திற்கு விவசாய விளைபொருட்கள் விற்பனையானது.

கள்ளக்குறிச்சி மார்க்கெட் . கமிட்டிக்கு, எள் 300 மூட்டை, மக்காச்சோளம் 55, சிவப்பு சோளம் 7, மூட்டை மணிலா ௨, எச்.பி.கம்பு உட்பட 366 மூட்டை விளை பொருட்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். சராசரியாக, ஒரு மூட்டை எள் 10,760, மக்காச்சோளம் 2,372, சிவப்பு சோளம், மணிலா 8157, எச்.பி.கம்பு 2,329 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. கமிட்டியில் மொத்தமாக ரூ.31 லட்சத்து 30 ஆயிரத்து 500க்கு நேற்று வர்த்தகம் நடந்தது.

சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் மக்காச்சோளம் 10, எள் 1 என மொத்தம் 11 மூட்டை விளைபொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர். சராசரியாக ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,255, எள் 4,939 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக 24 ஆயிரத்து 79க்கு வர்த்தகம் நடந்தது. தியாகதுருகம் மார்க்கெட் கமிட்டியில் எள் 50, நெல் 25 என மொத்தம் 75 மூட்டை விளைபொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர். சராசரியாக ஒரு மூட்டை எள் 12,611, நெல் 3177 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக ரூ.5 லட்சத்து 38 ஆயிரத்து 500க்கு நேற்று வர்த்தகம் நடந்தது.

Tags

Read MoreRead Less
Next Story