மண்டையூர் ஜல்லிக்கட்ட்டில் 32 பேர் காயம்
ஜல்லிக்கட்டு
கீரனூர் அருகே உள்ள மண்டையூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர்கள் உட்பட 32 பேருக்கு காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தவர்களில் 3 பேர் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள மண்டையூரில் பொங்கல் விழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டியில் 32 பேருக்கு காயம் ஏற்பட்டது. போட்டியை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே கே செல்லபாண்டியன், வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி தொடங்கி வைத்தனர். முதலில் கோயில் காளைகளும் பின்னர் இதர மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 617 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை அடக்க பல்வேறு சுற்றுகளாக 196 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். 14 பார்வையாளர்களுக்கு காயம் ஏற்பட்டது. இவர்களில் மூன்று பேர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். மற்றவர்களுக்கு இங்கே முதலுதவி அளிக்கப்பட்டது. காளைகள் அடக்கியவருக்கும் பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
Next Story