ஆலங்குடி, திருமயத்தில் 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

ஆலங்குடி, திருமயத்தில்  32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

ஆட்சியர் மெர்சி ரம்யா

சிவகங்கை மக்களவை தொகுதிக்குட்பட்ட ஆலங்குடி மற்றும் திருமயம் சட்டப்பேரவை தொகுதிகளில் 32 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வாக்குச்சாவடிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள 38 நுண் பாா்வையாளா்களுக்கான பயிற்சி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சிவகங்கை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட ஆலங்குடி மற்றும் திருமயம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 416 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய அரசுப் பணியிலுள்ள நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்படுகின்றனா். இதன்படி 38 நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டு, அவா்களுக்கான பயிற்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான மெர்சி ரம்யா தலைமை வகித்தாா். சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கான பொதுப் பாா்வையாளா் ஹரிஷ் முன்னிலை வகித்து, நுண் பாா்வையாளா்களின் பணிகள் குறித்து விளக்கிப் பேசினாா்.

Tags

Next Story