திருப்பத்தூரில்ரூ.3.26 இலட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்
Tirupathur King 24x7 |29 July 2024 9:38 AM GMT
திருப்பத்தூரில்மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.26 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் வழங்கினார்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில்மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.26 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் வழங்கினார் திருப்பத்தூர் ஆட்சியர் அலுவல வளாகத்தில்மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.18 இலட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.3,000 மதிப்பிலான காதொலி கருவி மற்றும் 1 பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ.5,000 மதிப்பிலான நவீன படிக்கும் கருவி என மொத்தம் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.26 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் வழங்கினார். இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் பெலிக்ஸ் ராஜா, அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story