33 ஆம் ஆண்டு பொங்கல் விழா
Dindigul King 24x7 |15 Jan 2025 3:22 AM GMT
திண்டுக்கல் கிருஷ்ணசாமி பிள்ளை சந்து பகுதியில் அப்துல் கலாம் நற்பணி மன்றத்தின் சார்பாக 33 ஆம் ஆண்டு பொங்கல் விழா
திண்டுக்கல் கிருஷ்ணசாமி பிள்ளை சந்து பகுதியில் அப்துல் கலாம் நற்பணி மன்றத்தின் சார்பாக 33 ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகச் செயலாளர் சண்முகம் விளையாட்டு கொடியினை ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து 22 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் செந்தில்குமார் குத்து விளக்கு ஏற்றி வைத்து அப்துல் கலாம் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு விளையாட்டு போட்டிகள் தொடங்கப்பட்டன. முதல் போட்டியாக அப்பகுதியில் உள்ள பெண்களுக்கான கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறுவர் சிறுமிகளுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் மியூசிக்கல் சேர், பாட்டில் தண்ணீர் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன போட்டிகளின் ஏற்பாடுகளை அப்துல் கலாம் மன்றத்தினுடைய செயலாளர் சிவக்குமார் சிறப்பாக செய்திருந்தார்.
Next Story