சமூக பொறுப்பு நிதி மூலம் 33.50 லட்சத்தில் பெண்கள் கழிப்பறை!

சமூக பொறுப்பு நிதி மூலம் 33.50 லட்சத்தில் பெண்கள் கழிப்பறை!

பெண்கள் கழிப்பறை

அரசு கல்லுரியில் கட்டபட்ட கட்டிட திறப்பு விழாவில் ஆட்சியர் பங்கேற்பு.
கோவை:பந்தய சாலை பகுதியில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரியில் மாணவிகளுக்கு எண்ணிக்கை ஏற்ப போதுமான கழிவறைகள் இல்லாத நிலையில் எமரால்டு ஜுவெல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சமூக பொறுப்பு (CSR) திட்டத்தில் கிரிஷா அறக்கட்டளை மூலம் கோயமுத்தூர் கல்லூரியில் மாணவிகளுக்காக 18 கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. கிரிஷா அறக்கட்டளை சார்பில் சுமார் 33.50 லட்சம் மதிப்பில் 18 கழிப்பறைக் கட்டிட கட்டுமான பணிகள் பிப்ரவரி 2024 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு கடந்த 5 மாதங்களாக கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த வாரம் நிறைவு பெற்றது.இந்த கழிப்பறை கட்டடத்தினை ஒப்படைப்பு விழா இன்று அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவில் கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்து நிகழ்ச்சியில் பேருரை ஆற்றினார். எமரால்டு ஜுவெல் இண்டஸ்ட்ரி நிறுவனத்தின் தலைவர் மற்றும் கிரிஷா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சீனிவாசன் அவர்கள் விழா சிறப்புரை ஆற்றி அறக்கட்டளையின் மூலமாக செய்து கொண்டிருக்கும் சமூக முன்னேற்ற நிகழ்வுகள் குறித்து விளக்கினார். மாணவ மாணவியர் கல்வி பயின்று பிற்காலத்தில் சமூக பணியாற்ற முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டார். இவ்விழாவில் அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் எழிலி, எமரால்டு நிறுவனத்தின் அலுவலர்கள், கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story