மாவட்டத்தில் இதுவரை ரூ.34 லட்சம் பறிமுதல் - ஆட்சியர் தகவல்

மாவட்டத்தில் இதுவரை ரூ.34 லட்சம் பறிமுதல் - ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.34 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.34 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

தோ்தல் பறக்கும் படையினா் மற்றும் கண்காணிப்பு குழுவினா் இதுவரை நடத்திய சோதனையில், வாகனங்களில் உரிய அனுமதியின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.34 லட்சத்து ஆயிரத்து 708 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ.16 லட்சத்து 73ஆயிரத்து 200 மதிப்பிலான மடிக்கணிணிகள் மற்றும் பரிசுப் பொருள்கள், ரூ.4 லட்சத்து 17 ஆயிரத்து 594 மதிப்பிலான போதைப் பொருள்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story