340 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணம் செய்து
Nagapattinam King 24x7 |21 Jan 2025 1:25 PM GMT
பழனிக்கு செல்லும் நண்பர்கள்
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் இருந்து பழனிக்கு நூற்றுக்கானக்கனோர் ஆண்டுதோறும் பாதயாத்திரை செல்வது வழக்கம். ஆனால் வித்தியாசமாக, வேதாரண்யம் தாலுகா கருப்பம்புலத்தை சேர்ந்த நண்பர்கள், சைக்கிளில் பழனிக்கு யாத்திரை சென்றனர். கருப்பம்புலத்தை சேர்ந்த ராஜசேகர், அவரது நண்பர் செல்வகணபதி ஆகியோர் பழனிக்கு சைக்கிளில் செல்ல முடிவு செய்தனர். ஆனால், இவர்களிடம் சைக்கிள் கிடையாது. இதனால், பழைய விலைக்கு சைக்கிள் வாங்க முடிவு செய்து, பழைய இரும்பு கடைக்கு சென்று இருவரும் சேர்ந்து 2 ஆயிரம் ரூபாய்க்கு இரண்டு சைக்கிள் வாங்கினர். இந்த சைக்கிளுக்கு மாலை அணிவித்து, சைக்கிளின் முன் பகுதியில், முருகன் படத்தை வைத்து, நேற்று 20- ம் தேதி கருப்பம்புலம் வடகாடு காலகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள முருகன் சன்னதியில் இருந்து இருமுடிகட்டி பூஜை செய்து பயணத்தை தொடங்கினர். சைக்கிளில் பழனிக்கு புறப்பட்டவர்களை ஊர்மக்கள் மலர் மாலை அணிவித்து, வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர். சைக்கிளில் பழனிக்கு செல்லும் நண்பர்கள் இருவரும், முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, குன்றக்குடி, பிள்ளையார்பட்டி, திண்டுக்கல் வழியாக பழனிக்கு நான்கு நாள் பயணமாக 340 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணம் செய்து, வருகிற 23- ம் தேதி பழனி சென்று அடைகின்றனர். பின்பு அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு ஊர் திரும்ப உள்ளனர்.
Next Story