கடல் அரிப்பு தடுப்பு சுவர் அமைக்க ரூபாய் 35 கோடி மதிப்பில் பணிகள் துவக்கம்
த.மனோ தங்கராஜ்
வள்ளவிளை முதல் பூத்துறை எடப்பாடு வரை 35 கோடி மதிப்பில் கடலரிப்பு தடுப்பு மேற்கொள்வதற்கான பணியினை அமைச்சர் த.மனோ தங்கராஜ் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் வள்ளவிளை முதல் பூத்துறை எடப்பாடு வரை கடலரிப்பு தடுப்பதற்கான கற்கள் போடும் பணியினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் அவர்கள், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் ஆகியோர் முன்னிலையில் இன்று துவக்கி வைத்து தெரிவிக்கையில். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, கடைகோடி கிராம மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் அரசாக செயல்பட்டு வருகிறது. அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட வள்ளவினை. புத்தன்துறை, சின்னத்துறை, தூத்தூர், பூத்துறை உள்ளிட்ட கடலோர கிராமங்களில் வசிக்கும்மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையிலும் அவர்களின் கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சுவணத்திற்கு கொண்டு சென்றதன் அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அதற்கான ஒப்புதல் உடனடியாக வழங்கப்பட்டதை தொடர்ந்து ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.35 கோடி மதிப்பில் வள்ளவிளை முதல் பூத்துறை எடப்பாடு வரை கடலரிப்பு தடுப்பதற்கான கற்கள் போடுவதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Next Story