ரூ.3.50 கோடி மதிப்பிலான 14 ஏக்கர் நிலங்கள் 350 தென்னை மரங்கள் ஏலம்.

X
Paramathi Velur King 24x7 |3 July 2025 6:59 PM ISTவெங்கரை பகுதி நீலகண்டேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.3.50 கோடி மதிப்பிலான 14 ஏக்கர் நிலங்கள் 350 தென்னை மரங்கள் ஏலம்.
பரமத்திவேலூர்,ஜுலை.3: பரமத்தி வேலூர் தாலுகா வெங்கரை கிராமத்தில் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த நீலகண்டேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.3.50 கோடி மதிப்பிலான 14 ஏக்கர் புன்செய் மற்றும் நன்செய் நிலங்கள் மற்றும் 350 தென்னை மரங்கள் பரமத்தி நீதிமன்ற உத்தரவின் படி ஆக்கிரமிப்புகள் அகற்றி சுவாதீனம் பெறப்பட்டது. சுவாதீனம் செய்யப்பட்ட கோவில் நிலங்கள் ஈரோடு மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி வழிகாட்டுதலின் படி நாமக்கல் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுவாமி நாதன் உத்தரவின்படி, நாமக்கல் மாவட்ட தனி தாசில்தார் செந்தில்குமார் (ஆலய நிலங்கள்), துணை கலெக்டர் குப்புசாமி (ஓய்வு), குமாரபாளையம் சரக ஆய்வாளர். வடிவுக்கரசி,கோவில் தக்கார் ஜனனி,கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணராஜ் மற்றும் கோவில் பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் முன்னிலையில் 3 ஆண்டுகளுக்கு முதன்முறையாக சுமார் 14 ஏக்கர் புன்செய் மற்றும் நன்செய் நிலங்கள் நில குத்தகை உரிமம் மற்றும் அந்த நிலங்களில் உள்ள சுமார் 350 தென்னை. மரங்களுக்கான மகசூல் உரிமம் ஆகியன பாண்டமங்கலம் பிரசன்ன பிரசன்ன வெங்கடாரமணன் கோவில் வளாகத்தில் பொது ஏலம் விடப்பட்டது. ஏலத்தின் மூலம் நீலகண்டேஸ்வரர் கோவிலுக்கு ரூ.8 லட்சத்து 11 ஆயிரத்து 900 ஈட்டப்பட்டு உள்ளதாக இந்து சமய அறநிலைய துறையினர் தெரிவித்தனர்.
Next Story
