முதல்வர் சேலம் வருகை - 350 காவலர்கள் பாதுகாப்பு பணி

முதல்வர் சேலம் வருகை - 350 காவலர்கள் பாதுகாப்பு பணி

தமிழக முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதல்வர் சேலம் வருவதையடுத்து 350 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (11ம் தேதி) தர்மபுரி மாவட்டத்திற்கு வருகிறார். அங்குள்ள அரசு கல்லூரி வளாகத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பேசவுள்ளார். இவ்விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து காலை 9 மணிக்கு விமானத்தில் புறப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு காலை 10 மணிக்கு வருகிறார்.

அங்கு அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்கின்றனர். பின்னர், காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து தொப்பூர் வழியே தர்மபுரி அரசு கல்லூரி வளாகத்திற்கு காரில் செல்கிறார். முதல்வர் வருகையையொட்டி சேலம் மாவட்ட எஸ்பி அருண் கபிலன் தலைமையில் 2 கூடுதல் எஸ்பிக்கள், 5 டிஎஸ்பிக்கள், 10 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தர்மபுரியில் மதியம் 12.30 மணிக்கு விழா முடிந்து, முதல்வர் சேலம் வந்து சென்னைக்கு விமானத்தில் செல்கிறார். அதனால், காலை முதல் மதியம் வரையில் 350 போலீசாரும் முதல்வர் சென்று வரும் பாதையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story