அரசு பயிற்சி மையத்தில் படித்த 351 பேர் தேர்ச்சி

அரசு பயிற்சி மையத்தில் படித்த 351 பேர் தேர்ச்சி

பைல் படம் 

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கு நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்புகள் மூலம் 351 நபர்கள் அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருவதாக மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்ததாவது: சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம், உள்ளிட்ட பல்வேறு தேர்வு வாரியங்களால் அறிவிக்கப்படும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் போன்ற பல்வேறு விதமான தேர்வு வாரியங்களால் அறிவிக்கப்பட்ட 12 விதமான போட்டித் தேர்வுகளுக்கு இந்த அலுவலகத்தில் நடத்தப்பட்ட இலவச பயிற்சி வகுப்புகளில் 1,574 தேர்வர்கள் கலந்துகொண்டு 351 நபர்கள் தேர்ச்சி பெற்று அரசுத் துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 2,222 பயனாளிகளுக்கு ரூ.3.25 கோடி உதவித்தொகையும், 38 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன்மூலம் 12,307 நபர்களுக்கு பணி வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. என கலெக்டர் தெரிவித்தார்.

Tags

Next Story