நாகை அவுரித்திடலில் 35-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதவிழா
நாகை அவுரித்திடலில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத்துறை சார்பில் 35-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதவிழாவையொட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகை அவுரித்திடலில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத்துறை சார்பில் 35-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதவிழாவையொட்டி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் .ஜானி டாம் வர்கீஸ், தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹாஷ் சிங் கலந்துகொண்டார் 35-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதவிழாவினை (15.01.2024 முதல் 14.02.2024) முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வாகன விற்பனையாளர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் அமர்ந்துசெல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணியும் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
இப்பேரணி நாகப்பட்டினம் புதியபேருந்து நிலையத்தின் அருகே உள்ள அவுரித்திடலில் இருந்து புறப்பட்டு நாகையின் முக்கிய வீதிகள் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றடைந்தது. இப்பேரணியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கும். ஓட்டுநர்களுக்கும் வழங்கினார்கள். வாகன சாலை பாதுகாப்பு வாசகங்கள் பொறித்த மஞ்சள் பை இந்நிகழ்ச்சியில் காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் .பழனிசாமி.
மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு. வெளிப்பாளையம், நாகப்பட்டினம் மற்றும் வேளாங்கண்ணி காவல் நிலைய ஆய்வாளர்களும், காவல் உதவி ஆய்வாளர்களும், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்களும் மற்றும் காவலர்களும், ஊர்காவல்படை மண்டல தளபதி ஆனந்த், அவர்கள் தலைமையில் ஊர்காவல்படையினரும் அனைத்து இருசக்கர வாகன முகவர்களும் மற்றும் ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி உரிமையாளர்களும் மற்றும் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.