36 அடி உயரமுள்ள ஐந்து தலை நாகத்துடன் கூடிய பிரம்மாண்ட சிவலிங்கத்திற்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பாலாபிஷேகம்

X
நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட தென்குடி அங்காளிபுரத்தில் அங்காளம்மன் ஆலயம் அமைந்துள்ளது.இந்த ஆலயத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி சமேத ஸ்ரீ தாண்டேஸ்வரர்,ஸ்ரீ பெரியாச்சி சமே ஸ்ரீ பெரியாண்டவர்,ஸ்ரீ காமேஸ்வரி சமேத ஸ்ரீ காமேஸ்வரன் உள்ளிட்ட பல்வேறு பரிவார தெய்வங்கள் அருள் பாலித்து வருகின்றன.இந்த ஆலயத்தில் வருடம் தோறும் ஆடி அமாவாசையை முன்னிட்டு கடந்த 12 வருடங்களாக ஸ்ரீ அங்காளம்மன் சக்தி பீடம் சேவா டிரஸ்ட் சார்பில் ஆடி அமாவாசை பால்குட திருவிழா நடைபெறும்.அந்த வகையில் இந்த வருடத்திற்கான ஆடி அமாவாசை பால் குட திருவிழா நேற்று கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று ஆடி அமாவாசை நாளில் கோவிலுக்கு அருகில் உள்ள திருமலை ராஜன் ஆற்றங்கரையிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.இதில் நூற்றுக கணக்கான பக்தர்கள் பால் குடத்தை தலையில் சுமந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக தென்குடியின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து அங்காளிபுரத்தை வந்தடைந்ததும் ஸ்ரீ அங்காளம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோவிலில் அமைக்கப்பட்டுள்ள 36 அடி உயரமுள்ள ஐந்து தலை நாகப் பாம்புடன் கூடிய பிரம்மாண்ட சிவலிங்கத்திற்கு சிறப்பு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.தொடர்ந்து இன்று இரவு சாமி வீதி உலா போன்றவை நடைபெற்று வரும் ஜூலை 28 ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வயல் காப்பு நடைபெற்று திருவிழா நிறைவுபெறுகிறது.இந்த பால்குட திருவிழாவில் பங்கு பெற்ற பக்தர்கள் அனைவருக்கும் கூழ் வாரத்தல் நிகழ்ச்சி முடிந்த பின்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story

