கன்னியாகுமரி தொகுதியில் 3602 தபால் வாக்குகள் நிராகரிப்பு
பைல் படம்
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 15 ஆயிரத்து 816 தபால் வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் 1715 ஓட்டுகள் நிராகரிக்கப்பட்டன. மேலும் வாக்கு எண்ணிக்கையின் போது படை பணியில் உள்ள வாக்காளர்களின் ஓட்டுகளை ஸ்கேன் செய்த போது, அது பதிவாகாததால் 1887 ஓட்டுகள் நிராகரிக்கப்பட்டன அந்த வகையில் மொத்தம் 3 ஆயிரத்து 602 ஓட்டுகள் நிராகரிக்கப்பட்டன.
தபால் வாக்குகளாக காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 5981 வாக்குகள் பெற்றிருந்தார். பாரதிய ஜனதா வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு 4718 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத்தது 466, ஓட்டுகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரியஜினி பருக்கு 828 வாக்குகளும் கிடைத்திருந்தது. தபால் ஓட்டுகளில் நோட்டாவுக்கு 76 வாக்குகள் பதிவாகி இருந்தது. மேலும் இவை தவிர சுயேட்சை வேட்பாளர் பாலசுப்பிரமணியனுக்கு அதிகபட்சமாக 25 வாக்குகள் கிடைத்திருந்தது.