நாகையில் 364 கிலோ கஞ்சா பறிமுதல்

நாகையில் 364 கிலோ கஞ்சா பறிமுதல்

கஞ்சா (பைல் படம்)

நாகப்பட்டினத்தில் தனிப்படை காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பதுக்கி வைக்கப்பட்ட 364 கிலோ கஞ்சா மற்றும் பைபர் படகு பறிமுதல் செய்யப்பட்டது. பதுக்கலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக தனிப்படை காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் வேட்டைகாரனிருப்பு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட நாலுவேதபதி, கவுண்டர் தெரு பகுதியில் கஞ்சா பதுக்கல் குற்றத்தில் ஈடுபட்ட நாகை , அக்கரைப்பேட்டை, கிருபாகரன் மகன் சத்தியசீலன (37) வேட்டைகாரனிருப்பு,முத்துச்சிதம்பரம், மகன் மகேந்திரன்(32) புஸ்பவனம் தனபால் மகன் சுகுமார் (29) , ஆகிய முன்று நபர்களை கைது செய்தும் அவர்களிடமிருந்து சுமார் 364 கிலோ கஞ்சா மற்றும் ஒரு பைபர் படகினை பறிமுதல் செய்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளனர்.

மேலும் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார். மேலும் இதுபோன்ற கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை, கடத்தல் ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். மேலும், இது போன்ற குற்ற செயல்களில் உங்களது ஊரிலும் யாரேனும் ஈடுபட்டால் உங்கள் எஸ்பியிடம் பேசுங்கள் 8428103090 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். புகார் தருபவர்களின் இரகசியம் பாதுகாக்கப்படும். என்றார்

Tags

Next Story