37 பவுன் தங்க நகையை திருடிய தொழிலாளியை

37 பவுன் தங்க நகையை திருடிய தொழிலாளியை
X
தூத்துக்குடி தங்க நகைகளை தர பரிசோதனை செய்யும் கடையில் 37 பவுன் தங்கத்தை திருடிய தொழிலாளியை மத்திய பாகம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
தூத்துக்குடி தங்க நகைகளை தர பரிசோதனை செய்யும் கடையில் 37 பவுன் தங்கத்தை திருடிய தொழிலாளியை மத்திய பாகம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாநகரின் WGC சாலையில் பிரபலமான நகைக் கடை எதிரே மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விகாஸ் (45) என்பவர் தங்க நகைகளை தர பரிசோதனை செய்து கொடுக்கும் கடை நடத்தி வருகிறார். இங்கு அவரது அப்பா காலத்தில் இருந்து சுமார் 30 ஆண்டுகளாக இந்த தொழிலை அவர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் இவரது கடையில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விட்டல் ஷிங்கடே (30) என்பவரை கடையில் வைத்து விட்டு விகாஸ் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு சென்று விட்டு திரும்பி வரும்போது கடையில் விக்டர் இல்லாமல் இருந்தார், பல இடத்தில் தேடியும் கிடைக்காதால் கடையில் உள்ள தங்க நகைகளை சரிபார்த்தார். அப்போது அவர் வைத்திருந்த 298 கிராம் சுமார் 37 பவுன் எடையுள்ள தங்க கட்டி காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார், இது குறித்து அவர் உடனடியாக மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், இதனை தொடர்ந்து மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில், நகர ஏ.எஸ்.பி. மதன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் தங்க நகை கட்டிகளை திருடிக் கொண்டு தப்பிச்சென்ற விட்டல் ஷிங்கடே போலீசார் கைது செய்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story