குமரி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 3,796 மாணவிகள் பயன்
மாவட்ட ஆட்சியர்
கன்னியாகுமரி போர்ட் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் புதுமைப்பெண் திட்டம் குறித்து கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது- தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம்,
செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், சான்றிதழ் படிப்பு / பட்டயப்படிப்பு / பட்டப்படிப்பு / தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1,000/- அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்.
இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித் தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம். கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் புதுமைப்பெண் திட்டத்தின் வாயிலாக இதுவரை 3,796 மாணவிகள் பயன்பெற்று வருகின்றார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்தார்.