ராமேஸ்வரம் மீனவர்கள் 38 பேர் விடுதலை
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த மாதம் 14, 28 தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்று தலைமன்னார், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து 5 விசைப்படகையும் அதிலிருந்து 38 மீனவர்களை கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தது.
இந்த நிலையில் 38 மீனவர்களுக்கும் இன்று சிறை காவல் முடிந்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதில் மீனவர்களை விசாரணை நடத்திய நீதிபதி 38 பேர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்னும் ஓரிரு தினங்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags
Next Story