38 நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி!
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வாக்குச்சாவடிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள 38 நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வாக்குச்சாவடிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள 38 நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சிவகங்கை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட ஆலங்குடி மற்றும் திருமயம் சட்டப்பேரவைத்தொகுதிகளில் மொத்தம் 416 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய அரசுப் பணியிலுள்ள நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதன்படி 38 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு,அவர்களுக்கான பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு தேர்தல் அலுவலரும் ஆ ட்சியருமான ஐ.சா. மெர்சி ரம்யா தலைமை வகித்தார்.
சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கான பொதுப் பார்வையாளர் எஸ். ஹரிஷ் முன்னிலை வகித்து, நுண் பார்வையாளர்களின் பணிகள் குறித்து விளக்கிப் பேசினார்.பயிற்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா. செல்வி, நெடுஞ்சாலை நிலமெடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே. சரவணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.