திருப்பூரில் ரூ.3.81 லட்சம் பறிமுதல்
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் 64 பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருப்பூர் காங்கேயம் சாலை பகுதியில் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது பிஎன் ரோடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் நான்கு சக்கர வாகனத்தில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 500 ருபாய் பணத்தை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்ததை தொடர்ந்து அதனை நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
இதே போல் செந்தில்குமார் என்பவர் 74 ஆயிரத்து 600 ரூபாய் பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்ததை தொடர்ந்து அதையும் பறிமுதல் செய்த நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்யப்பட்ட 3 லட்சத்து 81 ஆயிரத்து 200 ருபாய் பணத்தை மாநகராட்சி ஆனையாளரும் உதவி தேர்தலில் நடத்தும் அலுவலரமான பவன் குமாரிடம் ஒப்படைத்தனர்.