39 ஆம் ஆண்டு காளை விடும் திருவிழா

ஆரணி அடுத்த களம்பூர் மேட்டு தெருவில் பாரம்பரியம் போற்றும் காளை விடும் திருவிழா நடைபெற்றது. ஆரணி அடுத்த களம்பூர் மேட்டுத்தெருவில் 39ஆம் ஆண்டு காளை விடும் திருவிழா நடைபெற்றதி்ல்
ஆரணி அடுத்த களம்பூர் மேட்டு தெருவில் பாரம்பரியம் போற்றும் காளை விடும் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. ஆரணி அடுத்த களம்பூர் மேட்டுத்தெருவில் 39ஆம் ஆண்டு காளை விடும் திருவிழா நடைபெற்றதி்ல் திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன. இதில் முதல் பரிசு பெற்ற காளைக்கு ரூ.90ஆயிரமும், 2வது பரிசாக ரூ.69ஆயிரமும், 3ம் பரிசாக ரூ.39ஆயிரம் வழங்கப்ப்டடது. மேலும் கால் சவரன், டிவிக்கள், பீரோக்கள் என ஆறுதல் பரிசாக 50 காளை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது. விழாக்குழுத்தலைவர் எம்.விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். விழாக்குழு செயலாளர் ஆர்.ஜெகன்நாதன் அனைவரையும் வரவேற்றார். முன்னாள் எம்எல்ஏக்கள் கோ.எதிரொலிமணியன், கே.வி.சேகரன் ஆகியோர் காளை விடும் திருவிழாவினை துவக்கி வைத்தனர்.களம்பூர் பேரூராட்த்தலைவர் கே.டி.ஆர்.பழனி, களம்பூர் நகரசெயலாளர் வெங்கடேசன், ஊர் நாட்டாண்மை பூபால் கவுண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை களம்பூர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் குழுவினர் செய்திருந்தனர்.
Next Story