திருப்பத்தூர் அருகே கூலி தொழிலாளி பெண்ணிற்கு ரூ.39 கோடி ஜிஸ்டி வரி

திருப்பத்தூர் அருகே கூலி தொழிலாளி பெண்ணிற்கு ரூ.39 கோடி ஜிஸ்டி வரி

மனு கொடுக்க வந்த கூலித் தொழிலாளி பெண்

திருப்பத்தூர் அருகே கூலி தொழிலாளி பெண்ணிற்கு 39 கோடி ரூபாய் ஜிஸ்டி வரி வந்ததை அடுத்து வங்கி கணக்கு முடக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மணி இவரது மனைவி மலர் இவர் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் 100 நாள் வேலை செய்து வருகிறார் இவரது கணவர் மீன் வியாபாரம் செய்து வருகின்றார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு விழுப்புரம் பகுதியில் வணிக வரி துறையின் மூலம் வரி பணம் 22 கோடி மற்றும் வட்டி 17 கோடி மொத்தம் 39 கோடி வரி செலுத்த கடிதம் வந்துள்ளது.

இந்நிலையில் ஜோலார்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்டேட் வங்கியில் இவரது வங்கி கணக்கில் பணம் எடுக்க செல்லும்போது வங்கி கணக்கில் பணம் இல்லை என்றும் வங்கி கணக்கு முடக்கப்பட்டு இருந்தது தெரியவருகின்றது.

இதை குறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணீருடன் புகார் மனு கொடுத்தார் பேட்டி: மலர் கூறுகையில் நான் 100 நாள் கூலி வேலை செய்து வருகின்றேன்,

எனது கணவர் மீன் வியாபாரம் செய்து வருகின்றார் உங்களுக்கு வடிக்க சொந்தமாக வீடு கூட இல்லை வரி பணம் கட்ட சொல்லி கடிதம் வந்துள்ளது என்று கூறினார்

Tags

Next Story