பறக்கும் படையினர் நடத்திய வாகன தணிக்கையில் 3.97 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல்

தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன தணிக்கையில் 3.97 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் ஒப்படைப்பு.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் செங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தனிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் நேற்று இரவு திருவண்ணாமலை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செங்கம் அந்தனூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது நாச்சிபட்டு பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்ற நபர் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 670 ரூபாய் பறிமுதல் செய்தனர். இதேபோல் அல்லியந்தல் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர் கௌதம் என்ற நபரிடமிருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 2 லட்சத்து 70 ஆயிரத்து 440 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags

Next Story