நாமக்கல்-சேலம்-ஆத்தூா் வரையில் பயணிகள் ரயில் இயக்கப்பட வேண்டும் - INTUC மாநாட்டில் தீர்மானம்
இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ்- தமிழ்நாடு நாமக்கல் மாவட்ட கிளையின் 3-ஆவது மாநாடு நாமக்கல்லில் நடைபெற்றது.
நாமக்கல்-சேலம்- ஆத்தூா் வரையில் பயணிகள் ரயில் இயக்கப்பட வேண்டும். என நாமக்கல்லில் நடைபெற்ற INTUC மாவட்ட மாநாட்டில் தீர்மானம். இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ்- தமிழ்நாடு நாமக்கல் மாவட்ட கிளையின் 3-ஆவது மாநாடு நாமக்கல்லில் நடைபெற்றது. மாவட்ட கவுன்சில் தலைவா் கே.பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பீ.ஏ.சித்திக் முன்னிலை வகித்தாா். மாவட்ட கவுன்சில் செயலாளா் கே.பழனிவேலு வரவேற்றாா். தமிழ்நாடு ஐஎன்டியுசி தலைவா் வி.ஆா்.ஜெகநாதன் மாநாட்டை தொடக்கிவைத்துப் பேசினாா். அகில இந்திய ஐஎன்டியுசி செயலாளா் கே.ஏ.மனோகரன் வாழ்த்துரை வழங்கினாா். மாநாட்டில் லாரி, மோட்டாா் தொழிலுக்கு ஐஎன்டியுசி பெரும் பங்கு வகிக்கிறது. தொழிற்சங்கங்கள் மிகவும் நலிவடைந்த நிலையில் புதிய உத்வேகம் காண வழிவகை உருவாக்க வேண்டும். ராசிபுரம்- ஆத்தூா் சாலையை அகலப்படுத்த வேண்டும். நாமக்கல்-சேலம்-ஆத்தூா் வரையில் பயணிகள் ரயில் இயக்கப்பட வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் பெரிய தொழிற்சாலைகள் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொல்லிமலையில் உள்ள அரசுப் பணியாளா்களுக்கு குடியிருப்பு வசதி செய்து கொடுக்க வேண்டும். வீட்டுவசதி வாரியம் மூலம் லாரித் தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு குடியிருப்புகள் கட்டித் தரவேண்டும் என்பன உள்ளிட்ட 26 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story