வெம்பக்கோட்டையில் 3ம் கட்ட அகழாய்வு

வெம்பக்கோட்டையில் 3ம் கட்ட அகழாய்வு

வெம்பக்கோட்டையில் 3ம் கட்ட அகழாய்வுக்கான முன் ஆயத்த பணிகள் துவக்கப்பட்டுள்ளது.


வெம்பக்கோட்டையில் 3ம் கட்ட அகழாய்வுக்கான முன் ஆயத்த பணிகள் துவக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் 3ம் கட்ட அகழாய்வுக்கான முன் ஆயத்த பணிகள் துவக்கப்பட்டுள்ளது....ஜூன் முதல் வாரம் அகழாய்வு பணி துவங்க உள்ளதாக தகவல்!! விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் இரண்டு கட்ட அகழாய்வு நிறைவு பெற்றுள்ள நிலையில் 3ம் கட்ட அகழாய்வு நடத்துவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியது. இதையடுத்து தமிழக அரசு பட்ஜெட் கூட்ட தொடரில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்திருந்தது.

மக்களவை தேர்தல் காரணமாக மூன்றாம் கட்ட அகழாய்வு பணி துவங்குவதில் கால தாமதம் ஏற்பட்ட நிலையில் தற்போது அகழாய்வு பணிகள் துவங்குவதற்கன முன் ஆயத்த பணிகள் துவங்கியுள்ளது. மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் மேற்கொள்வதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அதனை சுத்தப்படுத்தி அளவீடு செய்வது, ஏற்கனவே நடைபெற்ற 2ம் கட்ட அகழாய்வில் தோண்டப்பட்ட அகழாய்வு குழிகளை மூடுவது உள்ளிட்ட பணிகள் அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தலைமையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வரும் ஜூன் முதல் வாரம் அகழாய்வு பணி துவங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நடைபெற்ற முதலாம் கட்ட அகழாய்வில் 3254 தொல் பொருட்களும் 2ம் கட்டத்தில் 4660 பொருட்கள் என இதுவரை 7914 தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story