4 பேர் கைது

4 பேர் கைது
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வட மாநில பெண் உள்பட 4 பேர் கைது
அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் ஈரோடு மாவட்டம், சென்னிமலை காவல்நிலையத்துக்கு உள்பட்ட குட்டப்பாளையம் பகுதியில் ஒரு பெண் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக ஈரோடு போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் குறிப்பிட்ட பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்துக்கிடமாக நடமாடிய வட மாநில பெண் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், ஒடிசா மாநிலம், கல்யாண் சிங்பூர், துமிர்குடா பகுதியைச் சேர்ந்த ஹல்கா அலை (49) என்பதும், அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சா 3 கிலோ வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான 3 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதேபோல, ஈரோடு கனி மார்க்கெட் பகுதியில் மேற்கொண்ட சோதனையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த சேலம் மாவட்டம், ஆத்தூர், அம்பலத்தடி வாத்தியார் வீதியைச் சேர்ந்த சுபாஷ் (44) என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் அவரிடம் இருந்து ரூ. 2,200 மதிப்பிலான 220 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.கவுந்தப்பாடி போலீசார் மேற்கொண்ட சோதனையில், குட்டிபாளையம், ராமர் கோயில் பின்புறம் கஞ்சா விற்பனை செய்த சுப்பிரமணி (52) என்பவரைப் பிடித்து, அவர் விற்பனைக்கு வைத்திருந்த ரூ. 400 மதிப்பிலான 40 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர் மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.அதேபோல கடம்பூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் விற்பனை செய்வதற்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த ஈரோடு மாவட்டம், கோபி அடுத்த எம்மாபூண்டி, ராயர்பாளையம் பகுதி சேர்ந்த ஸ்ரீதர் (20) என்பவரையும் போலீசார் கையும் களவுமாக பிடித்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story