4 பேர் கைது

4 பேர் கைது
X
சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது : ஒருவர் தப்பியோட்டம்
சென்னிமலை அருகேயுள்ள முகாசிபிடாரியூர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில், ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி வருவதாக சென்னிமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில்,  நேற்று முன்தினம் எஸ்.ஐ மணிவண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கும்பலைச் சுற்றி வளைத்து பிடித்தனர். இதில், சங்கர் (40) என்பவர் மட்டும் தப்பியோடி விட்டார். பின்னர் நடத்திய விசாரணையில், முகாசிபிடாரியூர் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (34), மாரியப்பன் (47), ஈஸ்வரன் (45), தோப்புபாளையத்தைச் சேர்ந்த செல்வக்குமார் (44) என்பது தெரியவந்தது.  இதனையடுத்து, போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து சூதாட பயன்படுத்தப்பட்ட சீட்டு கட்டுகள், பணம் ரூ.13,000 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
Next Story