4 டன் ஜெலட்டின் பறிமுதல் வழக்கில் போலீசார் தீவிர விசாரணை

X
Komarapalayam King 24x7 |2 March 2025 7:01 PM IST4 டன் ஜெலட்டின் பறிமுதல் வழக்கில் குமாரபாளையம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே நேற்றுமுன்தினம் 4 டன் ஜெலட்டின் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டத்திலிருந்து வாங்கி வந்த பார்த்திபன் என்பவரிடம் குமாரபாளையம் போலீசார், யார் வாங்கி வர சொன்னது? இதனை சப்ளை செய்தவர்கள் யார்? இது எங்கு தயாரிக்கப்படுகிறது? என்பது உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறை மேலதிகாரிகளும் நேரிடையாக இந்த விசாரணையில் ஈடுபட்டதாக கூறபடுகிறது. இன்று அல்லது நாளை முழு தகவல்களுடன் போலீசார் வெளியிட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Story
