கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கைது: 78 பவுன் மீட்பு

ஈரோடு நகர உட்கோட்டத்திற்கு உட்பட்ட தாலுக்கா, மொடக்குறிச்சி,வடக்கு மற்றும் பெருந்துறை காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளில் கொள்ளை சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வந்தது..இதில் கொள்ளை நடந்த இடத்தில் சேகரிக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் குற்றப்பதிவேடுகளை ஆய்வு செய்தனர்‌.

இதில் ஏற்கனவே குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு சிறை சென்றிருந்த கணேசன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது.இதனையடுத்து கணேசனை திருப்பூரில் தலைமறைவாக இருந்ததை அடுத்து தனிப்படை காவல்துறையினர் கணேசனை பிடித்தனர்.மேலும் அவரது கூட்டாளிகளான திருப்பூரில் வசித்து வரும் தௌபிக் ரஹ்மான் ,

ஆண்டனி ராபின்சன் (எ)நிசாந்தன் மற்றும் தையார் சுல்தான் (எ) தயாஸ் ஆகிய நால்வரை கைது செய்தனர். .நால்வரையும் கைது செய்த தாலுக்கா காவல்துறையினர் அவர்களிடம் இருந்து நகைகள் மற்றும் கையுறை,முகமூடி,கட்டிங் பிளேயர்,மல்ட்டி யூசர் நைப்,மடக்கும் இரும்பு ராட் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யபட்டது. இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியை கலக்கி காவல்துறையினரின் கண்ணில் சிக்காமல் தொடர்ந்து கொள்ளையில் ஈடுபட்டுவந்தவனை பிடித்த தனிப்படை காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் பாராட்டினார்.

Tags

Next Story