கஞ்சா விற்ற 4 பேர் கைது
காவல் நிலையம்
குமாரபாளையத்தில் போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. தங்கவடிவேல், எஸ்.எஸ்.ஐ. குணசேகரன், மாதேஸ்வரன், ஏட்டுக்கள் ராம்குமார், பார்த்திபன் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அரசு மேல்நிலைப்பள்ளி சாலை, காவேரி நகர் புதிய காவிரி பாலம் அடியில் ஆகிய இடங்களில் கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, நான்கு நபர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து மூவாயிரம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், குமாரபாளையம் கவுதம்ராஜ், 31, குப்புராஜ், 31, சரவணன், 39, வீரமணி, 32, என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story