4வது ஆண்டு புத்தகக் கண்காட்சியின் இறையன்பு IAS கருத்துரை
திருவள்ளூரில் 4வது ஆண்டு புத்தகக் கண்காட்சியின் 4 ம் நாளில் திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கும் மாணவ மனைவியர்களுக்கும் மனப்பாடம் எனும் மாயை என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் முன்னாள் தலைமை செயலாளர் முனைவர் வெ. இறையன்பு கருத்துரை வழங்கினார். திருவள்ளூர் சி வி என் சாலையில் உன்ன பொருட்காட்சி திடலில் நான்காம் ஆண்டு புத்தக கண்காட்சி கடந்த 7 ஆம் தேதி துவங்கியது கண்காட்சியினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறுபான்மை துறை அமைச்சர் சாமு நாசர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று தொடங்கி வைத்தனர் புத்தக கண்காட்சியின் 4ம் நாளான நேற்று பள்ளி மாணவியர்கள் பெற்றோர்கள் உடன் ஆர்வத்துடன் புத்தக கண்காட்சியில் பங்கேற்றனர். பள்ளி மாணவ மாணவியர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சியும் புத்தகக் கண்காட்சியில் நடைபெற்றது தமிழக அரசின் பொது நூலகத் துறை மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சியில் தென்னிந்திய பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் 108 அரங்குகளில் கலை இலக்கியம் மருத்துவம் சட்டம் ஆன்மீகம் அரசியல் வரலாறு போட்டித் தேர்வுகளுக்கான புத்தக அரங்குகள் பார்வையாளர்களை கவரும் விதத்தில் இருந்தது.மாணவர்கள் மனப்பாடம் செய்து படிப்பதால் பயனில்லை என்று புரிந்து தெரிந்து கொள்ளும் நினைவாற்றலை வளர்த்து கொள்ள வேண்டும் என்றார். முன்னதாக பால்ய யத்தில் கதைகள் தலைப்பில் எஸ் பால பாரதியும் தமிழ் இலக்கியத்தில் பெண்கள் பங்களிப்பு என்ற தலைப்பில் எழுத்தாளர் அண்ணாமலை என்ற இமையமும் உரை நிகழ்த்தி அரங்கில் இருந்தவர்களை சிந்திக்க தூண்டினார்.
Next Story



