மாரண்டஅள்ளியில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்
காவல் நிலையம்
மாரண்டஅள்ளியில் இருசக்கர வாகனத்தில் கடத்திய நான்கு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட மாரண்டஅள்ளி பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி விற்பதாக மாரண்டஅள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மாரண்டஅள்ளி அருகே பஞ்சப்பள்ளி சாலை பச்சையம்மன் கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் மொபட்டை கீழே போட்டுவிட்டு தப்பியோடி விட்டனர். இதையடுத்து போலீசார் மொபட்டை சோதனை செய்த பொது சீட்டுக்கு அடியில் பாலித்தீன் கவரில் 2 பொட்டலங்களில் மொத்தம் 4 கிலோ கஞ்சா இருந்தது.
இவற்றின் மதிப்பு 40 ஆயிரம் ஆகும். இந்த சம்பவம் குறித்து மாரண்டஹள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கடத்தி வந்த இரண்டு வாலிபர்களை தேடி வருகின்றனர்.
Next Story