கொத்தனார் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது
குமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் சரண் (25) என்ற கொத்தனாரை அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், சீனிவாசன், மோகன் ஆகிய மூன்று பேரும் கொன்றதாக கூறி, மதுரை கோர்ட்டில் சரணடைந்தனர்.
இந்த கொலை குறித்து குமரி மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட சரண் நண்பர்களுடன் சேர்ந்து 17 வயது மாணவர் ஒருவரை தாக்கியதாக கோட்டார் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு ஆனது தெரிய வந்தது.
விசாரணையில் மாணவரை தாக்கிய விவகாரத்தில் சரண் கொல்லப்பட்டார் என்ற தகவல் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
தற்போது இந்த கொலையில் கோட்டாறு பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்று அனீஸ் (23), கம்பளம் சந்திரகுமார் (20 ), ரயில்வே காலனி மகேஷ் (22) மற்றும் தேங்காய்பட்டணம் முகமது அஸ்கர் (19) ஆகிய நான்கு பேருக்கு தொடர்பு உள்ளதாக தெரிய வந்தது. உடனடியாக போலீஸ் 4பேரையும் அதிரடியாக கைது செய்தனர். இதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.