சேலத்தில் நடந்த வெள்ளி வியாபாரி கொலையில் மேலும் 4 பேர் கைது

X
கைது
சேலத்தில் நடந்த வெள்ளி வியாபாரி கொலையில் மேலும் 4 பேர் கைது
சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சங்கர். வெள்ளி வியாபாரியான இவர் கடந்த 2-ந் தேதி அதிகாலை கார் ஏற்றி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சங்கரின் மைத்துனர் சுபாஷ்பாபுவை போலீசார் கைது செய்தனர். இவர் கூலிப்படை தலைவனான பிரபல ரவுடி கோழி பாஸ்கருக்கு ரூ.2 லட்சம் கொடுத்து இந்த கொலையை அரங்கேற்றியது தெரியவந்தது. இதையடுத்து கோழி பாஸ்கரின் இரட்டை சகோதரிகள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே தலைமறைவாக இருந்து வந்த ரவுடி கோழி பாஸ்கர், சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தார். மேலும் அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஈரோடு கவுந்தப்பாடியை சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது 28), பெங்களூரு அத்திப்பள்ளியை சேர்ந்த சங்கர் (46) ஆகிய 2 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த நிலையில் கொலை வழக்கு தொடர்பாக நேற்று மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓசூர் பகுதியை சேர்ந்த திருவேங்கடம் (35), அவருடைய மைத்துனர் சந்திரசேகர் (30) மற்றும் ரவுடி கோழி பாஸ்கரின் சகோதரியான லதாவின் மகன்கள் மதன்குமார் (25), சங்கர் (22) ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் மதன்குமார், சங்கர் ஆகியோர் தங்களது நண்பரான விஸ்வா என்பவரின் ஆதார் கார்டு மூலம் சிம்கார்டுகளை வாங்கி அவரது தாய்க்கு கொடுத்தனர். அவர் வெள்ளி வியாபாரி சங்கரின் கொலைக்கு பயன்படுத்த கோழி பாஸ்கருக்கு கொடுத்தது தெரியவந்தது.
Next Story
