திண்டுக்கல் மாவட்டத்தில் 4பேர் குண்டா் சட்டத்தில் கைது

திண்டுக்கல் மாவட்டத்தில் 4பேர் குண்டா் சட்டத்தில் கைது

கோப்பு படம் 

திண்டுக்கல் மாவட்டத்தில் 4பேர் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் முத்தழகுபட்டியைச் சேர்ந்த ஜெ.எடிசன் ராஜ் (24), ரிச்சா்ட் சச்சின் (24), வேடசந்தூரைச் சேர்ந்த எஸ். பிரவீன் லாரன்ஸ் (28), திண்டுக்கல் தாலுகா அலுவலக சாலையைச் சேர்ந்த சி.அரவிந்தன் (26) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

இவா்கள் 4 பேரும் பல இடங்களில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதனால், அவா்கள் மீது குண்டா் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் துறை பரிந்துரை செய்தது.

இந்நிலையில், 4 பேர் மீதும் குண்டா் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஆட்சியா் தி.கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளதையடுத்து அதற்கான நகல் சிறையில் உள்ள 4 பேரிடமும் ஒப்படைக்கப்பட்டது.

Tags

Next Story