தென்பகம் கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி உள்ளிட்ட 4பேர் கைது

தென்பகம் கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி உள்ளிட்ட 4பேர் கைது
X

கோப்பு படம் 

தூத்துக்குடி மாவட்டம் தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்ற ரவுடி உட்பட 4பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் ஜங்ஷன் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் தூத்துக்குடி அந்தோணியார்புரம் 3 செண்ட் பகுதியை சேர்ந்த சண்முகவேல் மகன் மூர்த்தி (எ) மீரான் (23), தூத்துக்குடி கால்டுவெல் காலனியை சேர்ந்த முருகன் மகன் இசக்கி செல்வம் (26), தூத்துக்குடி கருணாநிதி நகரை சேர்ந்த முருகன் மகன் சூரிய பிரகாஷ் (20) மற்றும் தூத்துக்குடி வள்ளிநாயகபுரம் பகுதியை சேர்ந்த மகேஷ் குமார் (எ) எபி (29) ஆகியோர் என்பதும், அவர்கள் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து அவரிடமிருந்த செல்போனை கத்தியை காட்டி மிரட்டி பறித்து சென்றதும் தெரிய வந்தது.

மூர்த்தி (எ) மீரான், இசக்கி செல்வம், சூரிய பிரகாஷ் மற்றும் மகேஷ்குமார் (எ) எபி ஆகிய 4 பேரையும் கைது போலீசார் செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 20,000/- மதிப்புள்ள செல்போனையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். .

Tags

Next Story