வாலிபரை தாக்கிய 2சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது

X
கைது
வாலிபரை தாக்கிய 2சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது. போலீசார் நடவடிக்கை.
சேலம் களரம்பட்டி ஆட்டோ ஸ்டாண்ட் ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. மகன் ரமேஷ் (27). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தனுஷ் (19), மணிகண்டன் (19) மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்களுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று களரம்பட்டி ஆட்டோ ஸ்டாண்ட் அருகே ரமேஷ் நின்று கொண்டிருந்த போது, மதுபோதையில் வந்த தனுஷ், மணிகண்டன் மற்றும் 2 சிறுவர்கள் தகராறு செய்தனர். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் ரமேசை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ரமேசை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து ரமேஷ் கிச்சிப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனுஷ், மணிகண்டன் மற்றும் 2 சிறுவர்களை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து 17 வயதுடைய 2 சிறுவர்களையும் அஸ்தம்பட்டியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story
