வடகிழக்கு பருவமழையால் 4 பேர் உயிரிழப்பு

வடகிழக்கு பருவமழையால் 4 பேர் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டத்தில்வடகிழக்கு பருவமழையால் 4 பேர் உயிரிழப்பு - மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்

ஈரோடு மாவட்டத்தில்வடகிழக்கு பருவமழையால் 4 பேர் உயிரிழப்பு - மாவட்ட ஆட்சியர் தகவல்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால சுன்கரா மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பார்வையிட்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது ஈரோடு மாவட்டத்தில்ஈரோடு மாவட்டத்தில் மழைக்காலங்களில் பாதிக்கப்படும் 137 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது . வடகிழக்கு பருவமழை காரணமாக 4 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் , 36 குடிசைகள் பாதிகப்பட்டு, 4 கால்நடைகள் உயிரிழந்து இருப்பதாகவும் , பாதிக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றார். அன்னை சத்யா நகர், மல்லி நகர் ஆகிய பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுவதை தடுக்க நிரந்தர தீர்வுக்காக மாநகராட்சி சார்பில் 7 கோடி மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் அடுத்த ஆண்டிற்குள் பணிகள் முடிக்கப்படும் . சத்தியமங்கலம் வனப்பகுதியில் கடந்த வாரம் இரண்டு யானைகள் உயிரிழந்த்து தொடர்பாக வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.



Tags

Next Story