மீனாட்சி வலசில் பணம் வைத்து சூதாடிய 4பேர் கைது

மீனாட்சி வலசில் பணம் வைத்து சூதாடிய 4பேர் கைது

காவல் நிலையம்

மீனாட்சி வலசில் பணம் வைத்து சூதாடிய 4-பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர் மாவட்டம், தென்னிலை காவல் எல்லைக்குட்பட்ட, மீனாட்சி வலசு பகுதியில், பணம் வைத்து சூதாடுவதாக பெண் காவல் உதவி ஆய்வாளர் சுபாஷினிக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஏப்ரல் 28ம் தேதி மாலை 6:30- மணி அளவில், மீனாட்சி வலசு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது அருகில் உள்ள தூளக்காடு முள் தோட்டத்தில் பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட மீனாட்சி வலசு பகுதியைச் சேர்ந்த ராமனங்கம் வயது 56, அதே பகுதியை சேர்ந்த ஸ்டாலின் வயது 40, குப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் வயது 40, தென்னிலை, வடக்கு தெருவை சேர்ந்த ஜெகநாதன் வயது 48 ஆகிய 4- பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து ரூபாய் 700 பறிமுதல் செய்து,

அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் தென்னிலை காவல்துறையினர்.

Tags

Next Story