செல்போன் செயலி மூலம் ஓரினச் சேர்க்கைக்கு அழைப்பு - இளைஞருக்கு நடந்த சோகம்
இளைஞரிடம் வழிப்பறையில் ஈடுப்பட்டவர்கள் கைது
வழிப்பறியில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த 27 வயது நபர் ஒருவர் செல்போன் செயலி மூலம் ஓரின சேர்க்கையாளர்களுடன் தொடர்பு கொண்டுள்ளார்.அந்த நபர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத குறிப்பிட்ட இடத்திற்கு அவரை வரவழைத்துள்ளனர். அப்போது அங்கு தனிமையில் இருந்தபோது அங்கு வந்த மூவர் கொண்ட கும்பல் இளைஞரை தாக்கி அவர் அணிந்திருந்த 4 சவரன் தங்க நகையை பறித்துச் சென்றது இது தொடர்பாக பெருந்துறை காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட நபர் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த பெருந்துறை போலீசார் திருப்பூரை சேர்ந்த ஆனந்தகுமார் தினேஷ் அங்குகுமார் மற்றும் நந்தகுமார் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமிருந்து சொகுசு கார்,நான்கு பவுன் தங்க கட்டி மற்றும் 4 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர் தொடர்ந்து நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் சிறை காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story