போதைப்பொருட்கள் விற்ற 4 பேர் கைது!
கைது
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருமயம் தாலுகா நச்சாந்துபட்டி, பனையப்பட்டி, வீரணாம்பட்டி ஆகிய ஊர்களில் பெட்டிக்கடைகளில் தமிழக அரசால் தடை செய் யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பொன்னமராவதி டிஎஸ்பி ஜூலியஸ் சீசர் தலைமையில் சப்இன்ஸ்பெக்டர்கள் மதியழகன், சண்முகம் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது நச்சாந்துபட்டியில் செந்தில்நா தன்(42), பனையப்பட்டி கடைவீதியில் சதீஷ்குமார் (33) முத்துக்குமார்(43)ஆகியோர் கடைகளில் விற்பனைக் காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர். இதேபோல் வீரணாம்பட்டி விலக்கு பகுதியில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமார்(35) என்பவர் இருசக்கரவாகனத்தில் கொண்டு சென்ற புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
Next Story