நகை பறிப்பு - 4 போ் கைது

நகை பறிப்பு - 4 போ் கைது

கோப்பு படம்

திருவிடைமருதூர் அருகே நகை பறிப்பில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவிடைமருதூா் துணைக் கோட்ட காவல் எல்லைக்குள்பட்ட பகுதியில் நிகழ்ந்த நகை பறிப்பு, இரு சக்கரவாகன திருட்டு உள்ளிடட் பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடா்புடையவா்களை பிடிக்க தஞ்சாவூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆஷிஸ்ராவத் உத்தரவிட்டாா்.

அதன்பேரில் தனிப்படை அமைத்து போலீஸாா் தேடிவந்தனா். இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடா்புடைய நாச்சியாா் கோவிலைச் சோ்ந்த கனகவேல், விசலூரைச் சோ்ந்த நந்தகுமாா், நாகப்பட்டினத்தைச் சோ்ந்த கவியரசன். சிவகாசியைச் சோ்ந்த சிவபாலன் ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து 11 பவுன் தங்க நகைகள், 2 வெள்ளி பாத்திரங்கள், 2 வெள்ளி குத்துவிளக்கு, ஒரு மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றை கைப்பற்றினா். மேலும், 4 பேரையும் கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Tags

Next Story